திண்டுக்கல்
ஆயக்குடி-பொருளூர் இடையே சாலை அகலப்படுத்தும் பணி
|ஆயக்குடி-பொருளூர் இடையே சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பழனியை அடுத்த ஆயக்குடியில் இருந்து கள்ளிமந்தையம் செல்ல பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியே அமரபூண்டி, கொத்தயம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் சென்று வருகின்றனர். அதேபோல் தோட்டங்களில் இருந்து கொய்யா, மாங்காய் பறித்து வரும் விவசாயிகள் இந்த சாலை வழியாகத்தான் ஆயக்குடிக்கு வருகின்றனர்.
இந்தநிலையில் ஆயக்குடி-கள்ளிமந்தையம் சாலையில், ஆயக்குடி முதல் பொருளூர் வரையிலான சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் சுமார் 5 அடி வரையில் சாலையை அகலப்படுத்தப்படுகிறது. சில இடங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் அவை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், வாகன போக்குவரத்துக்கு வசதியாகவும், விபத்தை குறைக்கவும் பல்வேறு சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆயக்குடி-பொருளூர் இடையிலான சாலை அகலப்படுத்தும் பணிகள் நடக்கிறது. 19 கிலோமீட்டர் தூரத்தில் சுமார் 13 கிலோமீட்டர் தூரத்துக்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 6 கிலோமீட்டர் தூரத்துக்கு பணிகள் நடக்கிறது என்றனர்