தர்மபுரி
சரக்கு வாகனங்கள் நடப்பு காலாண்டுக்கான சாலை வரியை செலுத்த 30-ந் தேதி கடைசி நாள்வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல்
|தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நடப்பு காலாண்டு 31.3.2023-க்கு சாலை வரி செலுத்தாத சரக்கு வாகனங்கள் மற்றும் ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு 50 சதவீத அபராதத்துடன் வரி செலுத்த வருகிற 30- ந் தேதி கடைசி நாள் ஆகும். இதுதொடர்பாக அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் வரி கேட்பு அறிவிப்பு மற்றும் நோட்டீஸ் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே அனைத்து வாகன உரிமையாளர்களும் அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரியை ஆன்லைன் மூலம் உரிய காலக்கெடுவுக்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தவறும்பட்சத்தில் சாலை வரி செலுத்தாத வாகனங்களின் அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும். மேலும் வரி செலுத்தாமல் அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்ட வாகனங்களை பொதுசாலையில் இயக்கினால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.