< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
சாலை பாதுகாப்பு வார விழா
|5 March 2023 12:31 AM IST
சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது.
அரியலூர் மாவட்டம், செத்துறை வட்டம், ஆலத்தியூரில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. விழாவில் அரியலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு கருத்துகள் அடங்கிய பிரசுரங்கள் பெண்ணாடத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் தளவாய் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கும், பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வந்த வாகன ஓட்டிகளுக்கும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.