< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சாலை பாதுகாப்பு வார விழா
|14 Jan 2023 12:32 AM IST
அருப்புக்கோட்டையில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
ஜனவரி 11 முதல் 17-ந் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இந்தநிலையில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் டவுன் போக்குவரத்து போலீஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை ஆர்.டி.ஓ. கல்யாண்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட் ஆகியோர் தொடங்கி ைவத்தனர். இந்த பேரணி மதுரை ரோடு, மெயின்பஜார், திருச்சுழி ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இந்த பேரணியில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.