< Back
மாநில செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

தினத்தந்தி
|
14 July 2023 12:11 AM IST

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், திருச்சி நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ரெத்தினகுமார் வரவேற்றார். திருச்சி கோட்டப்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி கோட்டப்பொறியாளர் பிரமிளா, ஆலங்குடி உதவி கோட்டப்பொறியாளர் (கட்டுமானம்-பராமரிப்பு) ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் பள்ளி மாணவர்கள் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து வாகனம் நன்றாக ஓட்டி பழகிய பிறகு வாகனத்தை இயக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகு வாகனம் இயக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட், ஹெல்மெட் அணிந்து கொள்ள வலியுறுத்தப்பட்டது. வாகன ஓட்டும்போது வேக கட்டுப்பாடை மீறாதவாறு பார்த்து கொள்ளவும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்த கூடாது. டிரைவர்கள் அசதியாக இருக்கும் போது வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது. ஆட்டோ அல்லது வேனில் அளவுக்கு மீறி பயணிகளை ஏற்றுவது கூடாது. பஸ் படிக்கட்டில் பயணிக்க மாட்டோம். ஒலி எழுப்பானை மருத்துவமனை, பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு அருகில் பயன்படுத்தக் கூடாது என பல்வேறு விழிப்புணர்வுகளை பள்ளி மாணவர்களுக்கு ஒளிப்பட கருவி மூலம் எடுத்து கூறப்பட்டது. கருத்தரங்கில் ஆலங்குடி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் சுப்பையா, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்