< Back
மாநில செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
தேனி
மாநில செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
19 Oct 2023 3:00 AM IST

தேனியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தேனியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மதுரை சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு இந்த ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தொடங்கி வைத்தார். முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். பழைய பஸ் நிலையம், நேரு சிலை சிக்னல் வழியாக பங்களாமேடு பகுதியில் ஊர்வலம் நிறைவடைந்தது. இதில், தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வரலட்சுமி, சுவாமிநாதன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பொருளாளர் பழனியப்பன், பள்ளி செயலாளர் பாலசரவணக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்