< Back
மாநில செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
விருதுநகர்
மாநில செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
4 Oct 2023 2:20 AM IST

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். மதுரை ரோடு, புதிய பஸ் நிலையம் வழியாக சென்ற இந்த பேரணி சிவன் கோவில் அருகே நிறைவுற்றது. பேரணியில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பெரிய திருமால், உதவி கோட்ட பொறியாளர் வெங்கடேஷ் குமார், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், போக்குவரத்து போலீசார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



மேலும் செய்திகள்