திருநெல்வேலி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
|நெல்லையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நெல்லையில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மகேந்திர குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மோட்டார் சைக்கிள்கள், 4 சக்கர வாகனங்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் குலவணிகர்புரம், வீரமாணிக்கபுரம் வழியாக என்.ஜி.ஓ. காலனியை அடைந்தது. பின்னர், டிரைவர்கள், வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சியாளர்கள், வாகன விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் சுந்தர்சிங், உதவி இயக்குனர் சசிகலா, அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் சரவணன், தொழில்நுட்ப பொது மேலாளர்கள் சந்திர நாராயணன், கண்ணன், மோட்டார் ஆய்வாளர்கள் பிரபாகரன், ராஜசேகரன், பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.