< Back
மாநில செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
5 Feb 2023 12:42 AM IST

நெல்லையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, நெல்லை மாவட்ட ஓட்டுனர் பயிற்சிப்பள்ளிகளின் கூட்டமைப்பு, ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி சங்கம் ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் முன்பு தொடங்கிய இந்த பேரணியை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது மேலப்பாளையம் சிக்னலில் முடிவடைந்தது. அங்கு நடந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகரன் கலந்துகொண்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நெல்லையில் விபத்து ஏற்படுத்தாமல் ஆட்டோ ஓட்டிய டிரைவர்களுக்கு பரிசு வழங்கினார்.

மேலும் செய்திகள்