< Back
மாநில செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தென்காசி
மாநில செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
28 Sept 2023 12:15 AM IST

சங்கரன்கோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் உட்கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சங்கரன்கோவில் அரசு பயணியர் விடுதியில் முன்பு நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர்கள் பலவேசம், முத்துமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினர். மேலும் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகள் மற்றும் மலர்கள் வழங்கினர். தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு ஆலோசனை கூறி இலவசமாக ஹெல்மெட்டுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, சேர்மதுரை, நகர செயலாளர் பிரகாஷ், பேரூர் கழகச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிச்சையா, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் மாரியப்பன், மாவட்ட பிரதிநிதி செய்யதுஅலி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் அப்பாஸ் அலி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சிவசங்கரி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சங்கர், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் வக்கீல் சதீஷ், நகர துணைச் செயலாளர் சுப்புத்தாய், கணேசன், ஜெயக்குமார் மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்