< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
|24 Aug 2023 8:23 PM IST
போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
போளூர்
போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் போளூர் போக்குவரத்து கழக பணிமனையின் மேலாளர் பிரபாகரன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், சாலையில் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளையும், பஸ்சில் பயணம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பற்றியும் விளக்கி கூறினார்.
இதையடுத்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கண்காட்சியை 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சுதா, உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார், போக்குவரத்து கழக ஊழியர்கள் ராஜரத்தினம், அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.