< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
|1 Jun 2022 11:03 PM IST
தேனியில் போக்குவரத்து போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், தேனி போக்குவரத்து போலீசார் சார்பில், தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர். பிரசாரத்தின் போது தலைக்கவசம், சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களிலும், சீட் பெல்ட் அணியாமல் கார்களிலும் பயணம் செய்த மக்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.