< Back
மாநில செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தென்காசி
மாநில செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

தினத்தந்தி
|
2 July 2023 2:31 AM IST

தென்காசியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி,

தென்காசி மாவட்ட போக்குவரத்து காவல் துறை மற்றும் தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசியில் நடைபெற்றது. போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமை தாங்கினார். இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியின் நிர்வாக இயக்குனர் இசக்கி துரை ஆலோசனையின்படி, பள்ளி மாணவ மாணவிகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் போக்குவரத்து விதிமுறைகள் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் மோனிகா டி சோசா மற்றும் ஆசிரியர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்