< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலை மறியல் - 108 ஆம்புலன்சுக்காக மறியலை கைவிட்ட பொதுமக்கள்
|28 Oct 2022 3:34 PM IST
ராசிபுரத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், 108 ஆம்புலன்சுக்காக மறியலை கைவிட்டனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், 108 ஆம்புலன்சுக்காக மறியலை கைவிட்டனர். சந்திரசேகரபுரத்தில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு ஒரு மாதமாகியும் குடிநீர் விநியோகிக்கவில்லை.
இதனால், சேலம் - நாமக்கல் சாலையில் காலிக் குடங்களுடன் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 108 அவசர ஊர்தி வருவதைக் கண்டு, மறியலை விட்டுவிட்டு வழிவிட்டனர்.
இதையடுத்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.