< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
சாலைகள் சீரமைக்கும் பணி
|3 Nov 2022 7:51 PM IST
ஆற்காட்டில் சாலைகள் சீரமைக்கும் பணியை நகர மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகள் ஆங்காங்கே பழுது ஏற்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்ய ஆற்காடு பஸ் நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை சென்றடையும் எம்.ஜி.ஆர். சாலையில் உள்ள பள்ளங்களை கிராவல் கொட்டி சீர் செய்யும் பணி நடைபெற்றது.
இதனை நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பணிகள் விரைந்து முடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அப்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.