< Back
மாநில செய்திகள்
சாலை சீரமைப்பு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

சாலை சீரமைப்பு

தினத்தந்தி
|
7 Oct 2023 1:22 AM IST

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் செல்லப்பன்பேட்டை சாலை சீரமைக்கப்பட்டது

பூதலூர் ஒன்றியத்தில் உள்ள செல்லப்பன்பேட்டை ஏரியின் வடிகால் பகுதியில் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் மேல் பகுதியில் சிமெண்டு சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தினமும் அரசு பஸ், 2 சக்கர வாகனத்தில் செல்வோர், விவசாய விளை பொருட்கள் ஏற்றி செல்லும் லாரிகள் சென்று வருகின்றன. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வந்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த செய்தி படத்துடன் 'தினத்தந்தி'யில் வெளியானது. இதன் எதிரொலியாக தஞ்சை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு உடனடியாக குண்டும், குழியுமான சாலையை சீரமைத்தனர். செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறைக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்