< Back
மாநில செய்திகள்
சாலை சீரமைப்பு
திருவாரூர்
மாநில செய்திகள்

சாலை சீரமைப்பு

தினத்தந்தி
|
9 Sept 2023 12:15 AM IST

சாலை சீரமைப்பு

குண்டும், குழியுமான பவித்திரமாணிக்கம்- நீலக்குடி சாைலயை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பவித்திரமாணிக்கம்-நீலக்குடி சாலை

திருவாரூர் அருகே உள்ள பவித்திரமாணிக்கத்தில் இருந்து பெரும்புகளூர் வழியாக நீலக்குடியை இணைக்கும் வகையில் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி திருவாரூரில் இருந்து மத்திய பல்கலைக்கழகத்திற்கு எளிதாகவும், குறைவான நேரத்திலும் சென்று அடைய முடியும். இதனால் பலரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை எந்தநேரமும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது.

பவித்திரமாணிக்கத்தில் இருந்து இலவங்கார்குடி, பெரும்புகளூர், நீலக்குடி வரையிலான கிராம மக்கள் திருவாரூர் நகருக்கு வருவதற்கு இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த கிராம மாணவ-மாணவிகள் மேல்படிப்பு படிக்கவும், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் இந்த சாலையை கடந்து தான் திருவாரூருக்கு செல்கின்றனர்.

சீரமைக்க வேண்டும்

தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் சேதமடைந்த சாலையால் விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான பவித்திரமாணிக்கம்- நீலக்குடி சாைலயை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்