< Back
மாநில செய்திகள்
சாலை கெங்கையம்மன் கோவில் தேரோட்டம்
வேலூர்
மாநில செய்திகள்

சாலை கெங்கையம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
22 May 2022 8:52 PM IST

சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள சாலை கெங்கையம்மன் கோவில் தேர்திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 15-ந் தேதி மகா கணபதி ஹோமம், அம்மனுக்கு கூழ்வார்த்தல், காப்பு அணிவித்தல் நிகழ்ச்சிகளும், 16, 17-ந் தேதிகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. 18-ந் தேதி மறுகாப்பு அணிவித்தல், இரவு துர்க்கையம்மன் வீதி உலாவும், 19-ந் தேதி ஆதிபராசக்தி வீதிஉலாவும், 20-ந் தேதி தனலட்சுமி வீதிஉலாவும், 21-ந் தேதி சிவலிங்க பூஜை வீதிஉலாவும் நடந்தது.

காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, அலங்காரம் செய்யப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தேரில் கெங்கையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை 9 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். சத்துவாச்சாரியில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காணப்பட்டதால் சாலை அமைக்கப்பட்டிருந்த விஜயராகவபுரம் முதலாவது தெருவில் மட்டும் தேர் சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் கெங்கை அம்மன் வீதி உலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) காலை கெங்கையம்மனுக்கு சிரசு ஏற்றும் நிகழ்ச்சியும், மாலையில் இன்னிசை கச்சேரியும், இரவு வாணவேடிக்கை நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், சத்துவாச்சாரி நகர இளைஞரணி, ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்