< Back
மாநில செய்திகள்
ஆதனூர் ஊராட்சியில் ரூ.2½ கோடியில் சாலை அமைக்கும் பணி
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

ஆதனூர் ஊராட்சியில் ரூ.2½ கோடியில் சாலை அமைக்கும் பணி

தினத்தந்தி
|
15 Jun 2023 2:53 PM IST

ஆதனூர் ஊராட்சியில் ரூ.2½ கோடியில் சாலை அமைக்கும் பணியை ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஆதனூர் ஊராட்சிக்குட்பட்ட ஆதனூர்-கொருக்கந்தாங்கல் வழியாக மாடம்பாக்கம் வரை செல்லும் 4½ கிலோமீட்டர் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்அமுதன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் படப்பை மனோகரன், ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 66 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை போடும் நிகழ்ச்சி ஆதனூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்அமுதன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் குன்றத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், மாவட்ட கவுன்சிலர் அமுதா செல்வம், ஆதனூர்-கரசங்கால் ஒன்றிய கவுன்சிலர் மலர்விழி தமிழ்அமுதன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு தார் சாலை போடும் பணியை தொடங்கி வைத்தார். இதில் ஆதனூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வி ரவி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்