< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
ரூ.95 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
|9 March 2023 12:30 AM IST
மயிலாடும்பாறை அருகே ரூ.95 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி நடந்தது.
மயிலாடும்பாறை அருகே குமணன்தொழு முதல் பொன்னன்படுகை வரை சாலை பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இதனால் வாகன விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று குமணன்தொழு-பொன்னன்படுகை இடையே புதிய தார்சாலை அமைக்க ரூ.95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து குமணன்தொழு முதல் பொன்னன்படுகை வரை தார்சாலை அமைக்கும் பணி நேற்று நடந்தது. இதனை மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சாலை அமைக்கும் பணியை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.