< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
ரூ.16¼ லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
|18 April 2023 12:15 AM IST
செஞ்சி பகுதியில் ரூ.16¼ லட்சத்தில் சாலை அமைக்கும் பணி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான் தொடங்கி வைத்தார்
செஞ்சி
செஞ்சி பேரூராட்சி திருவண்ணாமலை சாலையில் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள சாலைகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 40 ஆயிரம் செலவில் மழை நீர் வடிகாலுடன் கூடிய பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் கலந்து கொண்டு துவா செய்து(பூஜை போட்டு) பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம், துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, உறுப்பினர்கள் ஜான்பாஷா, நூர்ஜகான், கோட்டை குமார், தொழில் அதிபர் ஆர்.கே.ஜி. ரமேஷ், டாக்டர் கலைமணி, மாவட்ட பிரதிநிதி சர்தார், தொண்டர் அணி பாஷா, அறிவழகன் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.