< Back
மாநில செய்திகள்
அம்பலூர் ஊராட்சியில் ரூ.26¾ லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

அம்பலூர் ஊராட்சியில் ரூ.26¾ லட்சத்தில் சாலை அமைக்கும் பணி

தினத்தந்தி
|
24 Jun 2022 7:19 PM IST

அம்பலூர் ஊராட்சியில் ரூ.26¾ லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் பகுதியில் தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.26 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் அம்பலூர் பகுதியிலிருந்து புதுஏரி பகுதிக்கு சாலை அமைக்கும் பணிகளுக்காக பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.ஆர்.கே சூரியகுமார் கலந்துகொண்டு சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், பொறியாளர் சுதாகர், நாட்டறம்பள்ளி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தசாமி, மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணிசாமுடி, சிங்காரவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்