திண்டுக்கல்
தாடிக்கொம்பு பகுதியில் ரூ.3 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி
|தாடிக்கொம்பு பகுதியில் ரூ.3 கோடியில் தார்சாலை அமைக்கும் பணியை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
தாடிக்கொம்புயை அடுத்த அகரம் பேரூராட்சி உலகம்பட்டி-அச்சாம்பட்டி இடையே ரூ.1 கோடியே 54 லட்சத்திலும், தாடிக்கொம்பு பூஞ்சோலை-பள்ளப்பட்டி இடையே சேதமடைந்த சாலையை ரூ.1 கோடியே 54 லட்சத்தில் சீரமைத்து தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. இதில், ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பூமிபூஜை மற்றும் சாலை பணியை தொடங்கி வைத்தார். மேலும் தாடிக்கொம்பு பேரூராட்சி ஆத்துப்பட்டியில் ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பகுதி நேர ரேஷன் கடையையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் திண்டுக்கல் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவி கவிதா சின்னத்தம்பி, துணைத்தலைவர் நாகப்பன், அகரம் பேரூராட்சி தலைவர் மணி என்ற நந்தகோபால், துணைத்தலைவர் ஜெயபால், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் வீராச்சாமி, தாடிக்கொம்பு பேரூர் தி.மு.க. செயலாளர் ராமலிங்கசாமி, அவைத்தலைவர் சுப்பிரமணி, பேரூர் முன்னாள் அவைத்தலைவர் சுப்பையா, தாடிக்கொம்பு பேரூராட்சி கவுன்சிலர்கள் அமலா ராணி, உஷாராணி மற்றும் தாடிக்கொம்பு, அகரம் பேரூராட்சி கவுன்சிலர்கள், தாடிக்கொம்பு பேரூராட்சி செயல் அலுவலர் சந்தனம்மாள், அகரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரி, கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் காதிராஜன், துணை பதிவாளர் அன்புக்கரசன், தாடிக்கொம்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.