< Back
மாநில செய்திகள்
தொட்டியம் ஊராட்சியில்ரூ.1 கோடியில் சாலை அமைக்கும் பணிஉதயசூரியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தொட்டியம் ஊராட்சியில்ரூ.1 கோடியில் சாலை அமைக்கும் பணிஉதயசூரியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
14 Aug 2023 12:15 AM IST

தொட்டியம் ஊராட்சியில் ரூ.1 கோடியில் சாலை அமைக்கும் பணியை உதயசூரியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

சின்னசேலம்,

சின்னசேலம் ஒன்றியம் தொட்டியம் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 3 லட்சம் செலவில் தொட்டியம் கிராமத்தில் இருந்து உலகங்காத்தன் சந்திப்பு சாலை வரை தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமை தாங்கி பூமிபூஜை செய்து, சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சின்னசேலம் ஒன்றிய குழு துணைத்தலைவர் அன்புமணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதன், ஒன்றிய பொறியாளர் அசோக்காந்த், ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி ராஜேந்திரன், பெற்றோர்-ஆசிரியர் கழக துணைச் செயலாளர் விஜயன், ஊராட்சி செயலாளர் துரை மற்றும் வார்டு உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சின்னசேலம் ஒன்றியம் கல்லாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட காலனி தெருவில் ரூ.4½ லட்சத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சிமெண்டு கல் பதிக்கும் பணியையும் உதயசூரியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்