< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சாலை அமைக்கும் பணி தொடக்கம்
|29 Sept 2023 2:12 AM IST
சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே உள்ள கண்டியாபுரம் அகதிகள் முகாம் மற்றும் வெம்பக்கோட்டை அணைக்கு செல்லக்கூடிய சாலை குண்டும், குழியுமாக, இருப்பதால் பொதுமக்கள் மற்றும் அணைக்கு பார்வையிட செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து அங்கு தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கண்டியாபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து அகதிகள் முகாம் வெம்பக்கோட்டை அணைக்கு செல்லக்கூடிய இடம் வரை தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. சாலை அமைக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.