< Back
மாநில செய்திகள்
பட்டுக்கோட்டையில், காங்கிரசார் சாலை மறியல்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பட்டுக்கோட்டையில், காங்கிரசார் சாலை மறியல்

தினத்தந்தி
|
26 March 2023 1:30 AM IST

பட்டுக்கோட்டையில், காங்கிரசார் சாலை மறியல் செய்தனர்.

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் எதிரே நகர, வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜாதம்பி, மாநில பொதுச் செயலாளர் மகேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கலைச்செல்வன், மாவட்ட நிர்வாகிகள் வைரக்கண்ணு, பிரபு, சக்திவேல், முருகையா, சிவா, ரகுநாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் நகர தலைவர் ரவிக்குமார், மதுக்கூர் வட்டார தலைவர் ரெங்கநாதன், அதிராம்பட்டினம் நகர தலைவர் தமீம் அன்சாரி, மதுக்கூர் நகர தலைவர் இத்ரீஸ் உள்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்