< Back
மாநில செய்திகள்
சம்பளம் வழங்கக்கோரி சாலை மறியல்
திருவாரூர்
மாநில செய்திகள்

சம்பளம் வழங்கக்கோரி சாலை மறியல்

தினத்தந்தி
|
19 Oct 2023 12:15 AM IST

100 நாள் வேலைக்கான சம்பளத்தை வழங்கக்கோரி திருவாரூர் பின்னவாசலில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர்;

100 நாள் வேலைக்கான சம்பளத்தை வழங்கக்கோரி திருவாரூர் பின்னவாசலில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

100 நாள் வேலைக்கான கூலி வழங்காததை கண்டித்தும், மகளிர் உரிமை தொகை விடுபட்டவர்களுக்கு வழங்கக் கோரி திருவாரூர் அருகே பின்னவாசல் கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் இடும்பையன் தலைமை தாங்கினார். மாதர் சங்க நிர்வாகி கோமதி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ராஜாங்கம்,ஒன்றியக்குழு உறுப்பினர் தியாகராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்து வந்த திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், தாசில்தார் நக்கீரன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 100 நாள் வேலைக்கான சம்பள பாக்கிய 10 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், கலைஞர் மகளிர் உரிமை தொகை விடுபட்ட பயனாளிகள் வீடுகளுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து தகுதியான பயனாளிகள் விடுபடாமல் உரிமைதொகை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தார்.இதன்பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்