< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல் - வர்த்தகம் பாதிப்பு
மாநில செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல் - வர்த்தகம் பாதிப்பு

தினத்தந்தி
|
29 May 2022 10:14 PM GMT

தூத்துக்குடி துறைமுகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை எனக்கூறி, சரக்குகளை ஏற்றி வரும் லாரி ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு லாரிகள் மூலம் சரக்குகள் கொண்டு வரப்படுகின்றன. ஆனால் துறைமுகத்திற்கு வரும் சரக்குகளை இறக்குவதில் துறைமுக நிர்வாகம் கால தாமதம் செய்வதாகவும், வெளிமாவட்ட லாரி ஓட்டுநர்களுக்கு உணவ, குடிநீர் என எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தருவதில்லை எனவும் லாரி ஓட்டுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக துறைமுக நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து லாரி ஓட்டுநர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் துறைமுகத்தின் இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்