< Back
மாநில செய்திகள்
வடமாநில வாலிபர் சாவு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

வடமாநில வாலிபர் சாவு

தினத்தந்தி
|
19 Feb 2023 2:03 AM IST

திருக்காட்டுப்பள்ளி அருகே லாரி மீது மொபட் மோதியதில் வடமாநில வாலிபர் உயிரிழந்தார்.

திருக்காட்டுப்பள்ளி;

உத்திர பிரதேச மாநிலம் கண்ணோஜ்மாவட்டம், காஞ்ச்பட் கிராமத்தைச் சேர்ந்தவர் தரம்வீர்(வயது24). இவர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் தங்கி இருந்து குல்பி ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்கு மொபட்டில் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். திருக்காட்டுப்பள்ளி செங்கிப்பட்டி சாலையில் புதுப்பட்டி தட்டாங்குளம் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் தரம்வீர் சென்ற மொபட் மோதியது. இதில். பலத்த காயம் அடைந்த தரம்வீரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தரம்வீர் உயிரிழந்தார். இது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்