< Back
மாநில செய்திகள்
கூலித்தொழிலாளி சாவு
திருவாரூர்
மாநில செய்திகள்

கூலித்தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
11 Sept 2022 12:03 AM IST

வலங்கைமான் அருகே ரோடு ரோலர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கூலித்தொழிலாளி இறந்தார்.

வலங்கைமான்;

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள, இனாம் கிளியூர் காந்திநகரை சேர்ந்தவா் முருகானந்தம்(வயது50). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று மாலை இவர் பாபநாசத்தில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றாா். அப்போது சாலையின் இடதுபுறத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரோடு ரோலர் மீது முருகானந்தம் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த முருகானந்தம் தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகானந்தம் நேற்று அதிகாலை இறந்தார். இது குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்