< Back
மாநில செய்திகள்
என்ஜினீயரிங் மாணவர் பலி
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

என்ஜினீயரிங் மாணவர் பலி

தினத்தந்தி
|
27 July 2022 2:10 AM IST

திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயமடைந்தார்.

திருவையாறு;

திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயமடைந்தார்.

என்ஜினீயரிங் மாணவர்கள்

திருவையாறு அருகே உள்ள வீரசிங்கம்பேட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின். இவருடைய மகன் சாம்கிறிஸ்டன்(வயது18). இவர் திருமலைச்சமுத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார்.. அதே கல்லூரியில் திருவையாறை சேர்ந்த சாரதிசெந்தில் மகன் குகனேஸ்வரன் (18) என்பவரும் பி.டெக் படித்து வருகிறார்.

லாரி மோதியது

நேற்று மாலை கல்லூரி முடித்து இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவையாறு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையிலிருந்து அரியலூர் சிமெண்டு ஆலைக்கு சென்ற லாரி பள்ளியக்ரஹாரம் புறவழிச்சாலை அருகே வந்த போது முன்புறம் சாம்கிறிஸ்டன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பரிதாப சாவு

இதில் சாம்கிறிஸ்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார். குகனேஸ்வரன் பலத்த காயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து தகவல் அறிந்த நடுக்காவேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாம்கிறிஸ்டன் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்