< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
பசு, கன்றுக்குட்டி சாவு
|15 Nov 2022 12:15 AM IST
மயிலாடுதுறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பசு, கன்றுக்குட்டி இறந்தது
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியில் சீர்காழி சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு சினை பசுமாடும், கன்றுக்குட்டியும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த வள்ளாலகரம் ஊராட்சி தலைவர் ஜெயசுதாராபர்ட் சம்பவ இடத்துக்கு வந்து இறந்த பசு மாட்டின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து, இறந்த பசுமாட்டினை எடுத்து செல்வதற்கு ஏற்பாடு செய்தார். மயிலாடுதுறை சாலைகளில் தொடர்ந்து மாடுகள், குதிரைகள், ஆடுகள் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறினர்.