< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
காரைக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும்
|20 Dec 2022 12:08 AM IST
காரைக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பெருசு காந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மயில்சாமி, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பாலமுருகன், மானாமதுரை சட்டமன்ற பொறுப் பாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பணிபுரியும் தலைமை டாக்டர்கள் தினசரி பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். காரைக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணிகள் மிக மெதுவாக நடைபெறுகிறது. எனவே பணியை துரிதப்படுத்தி விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.