ராமநாதபுரம்
பாம்பன் ரோடு பாலத்தில் எச்சரிக்கை பலகைகள்
|பாம்பன் ரோடு பாலத்தில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
பாம்பன்,
ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 5-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் பாம்பன் ரோடு பாலத்தில் விபத்தை தடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு தனஞ்செயன் மேற்பார்வையில் ராமேசுவரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஸ்லெட் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போக்குவரத்து போலீசார் பாம்பன் ரோடு பாலத்தில் முக்கிய இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக விபத்து பகுதி மெதுவாக வர வேண்டும் என்று எழுதப்பட்ட எச்சரிக்கை பலகைகளை வைத்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களிலும் வரும் வாகன ஓட்டிகளுக்கும் தெரியும் வகையில் அந்த எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ரோடு பாலத்தின் இரு நுழைவுப் பகுதியில் வேகத்தடை உள்ள மின்கம்பம் பகுதி மையப்பகுதி சாலை உள்ளிட்ட இடங்களிலும் அமைக்கப்பட்டு வருகின்றது.