< Back
மாநில செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டி அருகேதார்சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
தர்மபுரி
மாநில செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகேதார்சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
20 Oct 2023 12:30 AM IST

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் ஆலாபுரம் ஊராட்சியில் ஆலாபுரம், அம்மாபாளையம், ஜீவா நகர், மருக்காலம்பட்டி, நடூர், நேருநகர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் அம்மாபாளையம், தோழனூர் பகுதிகளுக்கு பாப்பிரெட்டிப்பட்டி கோழிமேக்கனூரில் இருந்து செல்லும் சாலை சேதம் அடைந்தது. இதையடுத்து கோழிமேக்கனூரில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவுக்கு புதிய தார்சாலை அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.

இந்த பணி தொடங்கி சாலை முழுமையாக தோண்டப்பட்டு அதில் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டது. அதன் பின்னர் தார்சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்று வரும் கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட, ஒன்றிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. எனவே தார்சாலை அமைக்கும், பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ெகாண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்