கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் பெற்றதில் இருந்தே அரசியலைமைப்புக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார் - கே.பாலகிருஷ்ணன்
|கவர்னர் ஆர்.என்.ரவியோடு தேநீர் விருந்தில் பங்கேற்கும் கேள்வியே எழவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
இப்போது நடைமுறையில் இருந்துவரும் கவர்னர் ஏற்பாட்டை சி.பி.ஐ(எம்) ஏற்கவில்லை. மத்திய ஆட்சியின் முகவர்களாக, மாநில சுயாட்சிக்கு விரோதமாக செயல்படும் கவர்னர்கள் என்ற ஏற்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டின் கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் பெற்றதில் இருந்தே அரசியலைமைப்புக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். கூட்டாட்சிக்கு விரோதமாக இருந்து வருகிறார். அப்பட்டமாக அரசியல் செய்துவரும் ஆர்.என்.ரவி அந்த பதவியில் நீடிப்பதே இழுக்கு என சி.பி.ஐ(எம்) பலமுறை கூறியுள்ளது. தொடர்ந்து அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிவருகிறது. எனவே அவருடைய தேநீர் விருந்தில் பங்கேற்பதென்ற கேள்வியே எழவில்லை.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.