மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
|மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் கேரளாவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை பி.டி. உஷாவும் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இருவரும் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக ஆகின்றனர்.
இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜா மற்றும் பி.டி.உஷாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இசை மாமேதை உத்வேகம் தரும் தனது வாழ்க்கை பயணத்தில் இசைஞானி இளையராஜா பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து, தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார். ராஜ்யசபா உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ராஜ்யசபா உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட பி.டி.உஷாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அவர் சிறந்த தடகள வீரர், விளையாட்டு வீரர்களுக்கும் மற்றும் நம் நாட்டின் இளைஞர்களுக்கும் உத்வேகம் தரும் சின்னமாக இருந்துள்ளார்" என்று கூறியுள்ளார்.