< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை
|10 April 2024 5:36 PM IST
78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் நேற்று காலமானார். அவருக்கு வயது 98. ஆர்.எம்.வீரப்பனுக்கு நேற்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன், சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
சென்னை நுங்கம்பாக்கம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்றார்.