தர்மபுரி
ஒகேனக்கல்லில்காவிரி ஆற்றில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்
|பென்னாகரம்:
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கிய தொழிலாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கூலித்தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா பகுதியை சேர்ந்தவர் மாயன். இவருடைய மகன் சக்தி (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் நேற்று தனது உறவினர் 3 பேருடன் ஒகேனக்கல் வந்தார். பின்னர் அவர்கள் ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு முதலை பண்ணை காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது சக்தி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக தெரிகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இதையடுத்து உறவினர்கள் ஒகேனக்கல் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பரபரப்பு
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தண்ணீரில் மூழ்கிய சக்தியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.