< Back
மாநில செய்திகள்
ஆடிப்பெருக்கையொட்டிஒகேனக்கல்லில் புனித நீராடிய பொதுமக்கள்குலதெய்வ கோவில் ஆயுதங்களை சுத்தம் செய்து வழிபாடு
தர்மபுரி
மாநில செய்திகள்

ஆடிப்பெருக்கையொட்டிஒகேனக்கல்லில் புனித நீராடிய பொதுமக்கள்குலதெய்வ கோவில் ஆயுதங்களை சுத்தம் செய்து வழிபாடு

தினத்தந்தி
|
4 Aug 2023 12:30 AM IST

பென்னாகரம்:

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் முக்கியமான ஒன்றாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் விளங்கி வருகிறது. இங்கு கர்நாடகா, கேரளா ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஆடிப்பெருக்கையொட்டி காலை முதலே ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர். இதனால் ஒகேனக்கல்லில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

இவ்வாறு பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் காவிரி ஆற்றில் புனித நீராடியதோடு, தங்களது குலதெய்வ கோவில்களில் இருந்து எடுத்து வந்த சாமி சிலைகள், ஆயுதங்களை சுத்தம் செய்து வழிபாடு நடத்தினர்.

ஒகேனக்கல்லில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் ஆடிப்பெருக்கையொட்டி தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்