< Back
மாநில செய்திகள்
சென்னை மக்களுக்கு எச்சரிக்கை.. காற்று மாசு அடைவதால் சர்க்கரை நோய் அதிகரிக்கும் அபாயம்
மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை.. காற்று மாசு அடைவதால் சர்க்கரை நோய் அதிகரிக்கும் அபாயம்

தினத்தந்தி
|
3 Nov 2023 4:28 PM IST

காற்று மாசுவுக்கும் டைப்-2 நீரிழிவு நோய்க்கும் தொடர்பு உள்ளதாக சர்வதேச பத்திரிகைகளில் 2 ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

சென்னை,

டெல்லியை போல சென்னை உள்ளிட்ட சில நகரங்களிலும் காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த வரம்பை விட காற்றின் தரம் மோசமாக உள்ளது. இவ்வாறு மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் "டைப் 2" நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கலாம் என ஆய்வு முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது .

டெல்லி மற்றும் சென்னையில் காற்று மாசுவுக்கும் டைப்-2 நீரிழிவு நோய்க்கும் தொடர்பு உள்ளதாக சர்வதேச பத்திரிக்கைகளில் 2 ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

மொத்தம் 12 ஆயிரம் நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில், அதிக அளவு மாசுபட்ட காற்றை சுவாசிப்பது, குறிப்பாக தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்ட பிஎம் 2.5 நுண்துகள்கள் கொண்ட காற்றை சுவாசிப்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதற்கு வழிவகுத்தது தெரியவந்துள்ளது.

இதுவரை மேற்கத்திய நாடுகள் மற்றும் சீனாவிலும் உறுதிப்படுத்தப்பட்ட இந்தத் தொடர்பு, இப்போது இந்தியாவின் நகர்ப்புறங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்