< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படும் அபாயம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படும் அபாயம்

தினத்தந்தி
|
1 March 2023 6:45 PM GMT

மாணவர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படும் அபாயம்

அரசுப்பள்ளி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் இருப்பதால் மாணவர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேணடும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு பள்ளி

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தாங்குடி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு அருகில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு தற்போது சம்பா சாகுபடி செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெல் கொள்முதலுக்காக பெரிய வகை மின் மோட்டார் எந்திரங்கள் பள்ளிக்கு அருகாமையில் வைத்து நெல் தூற்றப்படுகிறது. இவ்வாறு தூற்றும் போது நெல் தூசி, துகள்கள் பறந்து பள்ளியை சுற்றி உள்ள பகுதிகளில் காற்றில் கலப்பதுடன், கட்டிடங்கள் மற்றும் செடிகளில் படிந்துள்ளது. இதனால் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இருமல் உள்ளிட்ட சுவாசக்கோளாறுகள் அடிக்கடி ஏற்படுவதாகவும், இதனால் சிலர் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பவே அச்சப்படுகின்றனர்.

நடவடிக்கை

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தூசிகள் பள்ளி பகுதிக்கு அருகாமையில் தூற்றப்பட்டு வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி அதனைச்சுற்றி தடுப்புகள் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி சமூக அலுவலர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்