< Back
மாநில செய்திகள்
இறந்து கிடக்கும் பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்
விருதுநகர்
மாநில செய்திகள்

இறந்து கிடக்கும் பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்

தினத்தந்தி
|
2 March 2023 12:44 AM IST

இறந்து கிடக்கும் பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.

சாத்தூர்,

சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் சாத்தூர் வைப்பாற்றங்கரை பகுதிகளான குப்பை கிடங்கு, சுடுகாடு, வெள்ளைக்கரை ரோடு பழைய பூங்கா, அமீர்பாளையம், படந்தால், வெங்கடாசலபுரம் ஆகிய பகுதிகளில் பன்றிகள் அதிகமாக உள்ளன. இந்தநிலையில் கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதியில் மர்ம நோயினால் 50-க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்து வருகின்றன. இதனை முறையாக அகற்றாததால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயநிலை உள்ளது. எனவே ஆங்காங்கே இறந்து கிடக்கும் பன்றிகளை உடனே அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்