< Back
மாநில செய்திகள்
தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்
விருதுநகர்
மாநில செய்திகள்

தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

தினத்தந்தி
|
14 Oct 2023 1:17 AM IST

தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இந்திராநகரில் வள்ளுவர் தெரு உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் மற்றும் சாக்கடை சுத்தப்படுத்தப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த பகுதி முழுவதும் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயநிைல நிலவுகிறது. ஆதலால் தேங்கி நிற்கும் கழிவுநீைர வெளியேற்றி கழிவுநீர் கால்வாயை தூர்வாரி தடையின்றி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்