< Back
தமிழக செய்திகள்
திறந்தவெளி கிணறுகளால் விபத்து அபாயம்
விருதுநகர்
தமிழக செய்திகள்

திறந்தவெளி கிணறுகளால் விபத்து அபாயம்

தினத்தந்தி
|
17 Oct 2023 1:05 AM IST

ஆலங்குளம் பகுதிகளில் திறந்தவெளி கிணற்றினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் பல்வேறு தேவைகளுக்காக கிணறுகள் தோண்டப்பட்டன. அப்போது இந்த கிணற்றில் தண்ணீர் வற்றாமல் இருந்ததால் பொதுமக்கள் தினமும் பயனடைந்து வந்தனர். ஒரு சில இடங்களில் கிணற்றில் உள்ள நீரை பயன்படுத்தி சாகுபடி மேற்கொண்டனர். ஆனால் தற்போது பெரும்பாலான கிணறுகளில் தண்ணீர் இல்லை.இதனால் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஆதலால் எண்ணற்ற இடங்களில் கிணறு பாழடைந்து காணப்படுகிறது.

ஆலங்குளம் அருகே உள்ள இருளப்ப நகரில் திறந்தவெளி கிணறு உள்ளது. இந்த கிணற்றின் அருகில் பிள்ளையார்கோவில் உள்ளது. இந்த கிணற்றை சுற்றி இருளப்ப நகர், ஏ.டி.ஆர் நகர் உள்ளது.ஆதலால் இந்த கிணற்றை சுற்றி எப்போதும் மக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த கிணறு திறந்த நிலையில் பயன்பாடற்று காணப்படுகிறது. இதனால் குழந்தைகள் கிணற்றில் விழுந்து விடுவார்களோ என அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே விபத்து எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக ஆலங்குளம் பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் முழுவதையும் பாதுகாப்பான முறையில் மூடி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்