< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்
|30 Sept 2023 12:16 AM IST
கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் கால்நடைகள் மற்றும் தெருநாய், பன்றி போன்றவற்றின் தொல்லை அதிகம் உள்ளது. இவை இரவும், பகலும் சாலையில் படுத்துக்கொண்டும், சாலையை மறித்தும் நின்று கொள்கின்றன. இதனால் அந்த வழியாக வருகின்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிவரும் வாகன ஓட்டிகள் சாலையில் தொடர்ந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.