< Back
மாநில செய்திகள்

கோப்புப்படம்
மாநில செய்திகள்
நீர்வரத்து அதிகரிப்பு: சின்னசுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

6 Nov 2023 4:40 AM IST
தேனி மாவட்டம் சின்னசுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி,
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சின்னசுருளி அருவி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தில் 50 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த அருவிக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் சின்னசுருளி அருவியில் தொடர்மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி, அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க, மேகமலை வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.