< Back
மாநில செய்திகள்
உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்வு
கரூர்
மாநில செய்திகள்

உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்வு

தினத்தந்தி
|
7 Jun 2022 11:43 PM IST

உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்தது. பூவன் தார் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். வாழைத்தார் விளைந்ததும் கூலியாட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ.500-க்கும், ரஸ்தாலி ரூ.350-க்கும், பச்சைநாடன் ரூ.250-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கும் மொந்தன் காய் ஒன்று ரூ.5-க்கும் விற்பனையானது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ.600-க்கும், ரஸ்தாலி ரூ.400-க்கும், பச்சைநாடன் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.450-க்கும், மொந்தன் காய் ஒன்று ரூ.6-க்கும் விற்பனையானது. உற்பத்தி குறைந்ததால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்