< Back
மாநில செய்திகள்
உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்வு
கரூர்
மாநில செய்திகள்

உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்வு

தினத்தந்தி
|
1 Jun 2022 11:55 PM IST

உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.

நொய்யல்,

நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நஞ்சைபுகழூர், பாலத்துறை, கொங்கு நகர், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் பூவன் வாழை, பச்சநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர். வாழைத்தார் விளைந்ததும் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டுவரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.400-க்கும், கற்பூரவல்லி ரூ.300-க்கும், ரஸ்தாளி ரூ.300-க்கும், பச்சநாடன் ரூ.250-க்கும், மொந்தன் ரூ.300-க்கும் விற்பனையானது. இந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.550-க்கும், கற்பூரவல்லி ரூ.370-க்கும், ரஸ்தாளி ரூ.370-க்கும், பச்சநாடன் ரூ.325-க்கும், மொந்தன் ரூ.420-க்கும் விற்பனையானது. வாழைத்தார் உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்