< Back
மாநில செய்திகள்
தேங்காய் சிரட்டை விலை உயர்வு
கரூர்
மாநில செய்திகள்

தேங்காய் சிரட்டை விலை உயர்வு

தினத்தந்தி
|
22 May 2022 11:56 PM IST

தேங்காய் சிரட்டை விலை உயர்ந்துள்ளது.

நொய்யல்

நொய்யல், மரவாபாளையம், முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர். தென்னை மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் தேங்காயைப் பறித்து மட்டைகளை அகற்றிவிட்டு முழு தேங்காயை உடைத்து தேங்காய்க்குள் உள்ள தேங்காய் பருப்புகளை எடுத்து காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதே போல் தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டை கைகளை குவித்து வைத்து அப்பகுதி களுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய தேங்காய் சிரட்டைகளை தேங்காய்சிரட்டை மூலம் கரி தயார் செய்பவர்களுக்கும், தேங்காய் சிரட்டையை அரைத்து பவுடர் தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். பலர் தேங்காய் சிரட்டைகள் மூலம் உண்டியல், பொம்மைகள் என பல்வேறு வகையான பொருட்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.8-க்கு விற்பனையானது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ. 10-க்கு விற்பனையாகிறது. தேங்காய் சிரட்டை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்